நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் தம்பி எம்.ஆர்.சேகருக்கு 2 நாட்கள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது. கரூரில் 100 கோடி ரூபாய் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து அபகரித்த வழக்கில் எம்.ஆர்.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், அவர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து, எம்.ஆர். சேகரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 2 நாள் அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.