news-tamil-logo

3/18/2026, 2:52:41 PM

news-tamil-logo
more
Advertisement
Home news எம்.எல்.ஏ.வின் வெறி - அதிர்ச்சி ஆதாரம்
tv

Also Watch

tv

Read this

எம்.எல்.ஏ.வின் வெறி - அதிர்ச்சி ஆதாரம்

திமுக கூட்டணி கட்சி கண்டனம்

Posted on: Feb 04, 2026 10:03 AM

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கரூர் அருகே குவாரி முறைகேடு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடைபெற்ற நிலையில், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியதற்கான அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகி உள்ளது.

அசிங்கமாக பேசியபடி எம்.எல்.ஏ. தாக்குதல்
நியூஸ் தமிழ் ஊடக ஒளிப்பதிவாளர் வைத்திருந்த கேமராவைப் பிடுங்கி, நிருபரை தாக்கிய எம்.எல்.ஏ. பழனியாண்டி, காதில் கேட்க முடியாத ஆபாச வார்த்தைகளால் பேசியபடி தாக்கிய காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுக கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தல்
நியூஸ் தமிழ் நிருபரை தாக்கியது யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உறுதி அளித்துள்ளார்.

MLA பழனியாண்டிக்கு வைகோ கடும் கண்டனம்
நியூஸ் தமிழ் நிருபரைத் தாக்கிய எம்.எல்.ஏ. பழனியாண்டிக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

பாராமுகம் காட்டுவது ஏன்? - தமிழிசை கேள்வி
கண்ணுக்கு முன்னால் நடக்கும் அவலங்களை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? என்று, பா.ஜ.க. மூத்த தலைவரும், புதுச்சேரி முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். எம்எல்ஏ பழனியாண்டியை தப்பிக்க விடாமல் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

கரூர் காவல்துறை மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
நியூஸ் தமிழ் செய்தியாளர் மீதான எம்.எல்.ஏ.வின் கொலைவெறித் தாக்குதல், ஜனநாயகத்துக்கே அவமானம் என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருப்பதாக, கரூர் மாவட்டக் காவல்துறை மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். நிருபர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட கரூர் மாவட்ட காவல்துறை, பழனியாண்டி என்ற நபர், அன்று சம்பவ இடத்தில் இருந்ததாகவே எங்கும் குறிப்பிடவில்லை என்று கூறியுள்ள அண்ணாமலை, கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சிப்பதாக கூறி உள்ளார்.

எத்தனை மோசமான நிலையில் காவல்துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் என்று கூறியுள்ள அண்ணாமலை, பழனியாண்டி உள்ளிட்ட அனைவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Related Link
வெளியான MLA வீடியோ.. பாஜகவில் இருந்து வந்த முதல் குரல்

வெளியான MLA வீடியோ.. பாஜகவில் இருந்து வந்த முதல் குரல்

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
6 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved