கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு, மருத்துவரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய பெண்ணின் பெற்றோர், சிபிஐ விசாரணையை விரைவுபடுத்தும் என்று நினைத்ததாகவும், தற்போது அந்த அமைப்பு தங்களை தோல்வியடையச்செய்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.