ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என இபிஎஸ் திட்டவட்டமாக கூறி உள்ளார். ஓபிஎஸ் கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து பொதுக்குழுவால் நீக்கப்பட்டவர் என்றும் விளக்கம் அளித்துள்ளார். பலமுறை கூறிவிட்டேன் - இபிஎஸ் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:நான் பலமுறை கூறிவிட்டேன். அவர் 4 வருடமாக கட்சியில் இணைய வேண்டும் என கேட்டு வருகிறார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனவே, அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.கட்சி எடுத்த முடிவுஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது என்பது நான் எடுத்த முடிவு இல்லை. 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து எடுத்த முடிவின்படி, ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கட்சிக்கு இழைத்த துரோகம் காரணமாக, பொதுக்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவு இது.சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை2026 தேர்தல் முடிவில் அதிமுக தான் ஆட்சியமைக்கும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. கூட்டணி இறுதி செய்யப்பட்டவுடன் உங்களிடம் தெரிவிப்போம். சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி இறுதி வடிவம் பெற்றவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்குவோம்இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். Related Link நான் தயார், அவர் தயாரா?