news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை, பங்கேற்றவர்கள் யார் யார்?
tv

Also Watch

tv

Read this

இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை, பங்கேற்றவர்கள் யார் யார்?

தவெகவுக்கு அழைப்பு இல்லை

20

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டெல்லியில் இரண்டாண்டுகளுக்கு பிறகு இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சோனியாகாந்தி, கார்கே, ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ், தேஜஸ்வி, உமர் அப்துல்லா, சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமாவளவன், வைகோ பங்கேற்பு
இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் இருந்து, விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஆலோசனையில் கலந்து கொண்டார்.

திமுக, ஆம் ஆத்மி கட்சி புறக்கணிப்பு
காங்கிரஸ் உடனான உறவு முறிவை அடுத்து, இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தை திமுக புறக்கணித்தது.

டெல்லி-ஹரியானா தேர்தல்களில் தங்களை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இருக்கும் இடத்தில் தாங்கள் எப்படி இருக்க முடியும்? என ஆம் ஆத்மி கட்சியும் கேள்வி எழுப்பி, கூட்டத்தை புறக்கணித்து உள்ளது.

தவெகவுக்கு அழைப்பு இல்லை
இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டை ஆளும் தவெக கட்சிக்கு அழைப்பு இல்லை. எம்.பி.க்களை வைத்திருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டு உள்ளது.

முக்கிய ஆலோசனையில் இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்றது. காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி,

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆகிய தலைவர்கள் பங்கேற்றனர்.

தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த ஜான் பிரிட்டாஸ், தீபங்கர் பட்டாச்சார்யா, சந்தோஷ் குமார், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, புரட்சிகர சோசலிச கட்சியின் எம்பி பிரேமசந்திரன் உள்ளிட்டோர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Link
பிரக்ஞானந்தாவுடன் செஸ் ஆடிய முதல்வர் ஜோசப் விஜய்

பிரக்ஞானந்தாவுடன் செஸ் ஆடிய முதல்வர் ஜோசப் விஜய்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

2
5 hrs 8 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved