news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews நடிகர் கேபிஒய் பாலா நடிக்கும் "ரீமேட்ச்" திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

நடிகர் கேபிஒய் பாலா நடிக்கும் "ரீமேட்ச்" திரைப்படம்

ரீமேட்ச்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரீமேட்ச்

படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டுள்ள படக்குழு :

நடிகர் கேபிஒய் பாலாவின் "ரீமேட்ச்" திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் விமல் குமார் இயக்க, பாலாவோடு சேர்ந்து சந்தோஷ் பிரதாப், தனு ஹர்ஷா மற்றும் செல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்ட காதல் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

நடிகர் அர்ஜூன் நடித்துள்ள "பிளாஸ்ட்" திரைப்படம் :

நடிகர் அர்ஜூன் நடித்துள்ள "பிளாஸ்ட்" திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில், பேருந்தில் நடிகை அபிராமி சண்டையிடுவது போன்ற காட்சி இடம்பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த 28-ம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியான பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருவதால், வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

என்னால் முடியும் வரை கார் பந்தயத்தில் ஈடுபடுவேன் :

தன்னால் கார் பந்தயங்களில் எவ்வளவு காலம் ஈடுபட முடியுமோ, அவ்வளவு காலம் தொடர்ந்து பங்கேற்க விரும்புவதாக நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 வருடங்களாக துபாயை மையமாகக் கொண்டு வசித்து வருவதாகவும், கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய கடமைகள் இருப்பதால், ஐரோப்பாவில் அதிக நேரத்தை செலவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டிற்கான பந்தய திட்டங்களை தற்போதே தயார் செய்து வருவதாகவும், "ஏசியன் லெ மான்ஸ்" மற்றும் "இ.எல்.எம்.எஸ்" ஆகிய தொடர்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிலம்பரசனின் 51-வது படம் :

ரஜினிகாந்தை தொடர்ந்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சிலம்பரசனின் 51-வது படமாக அஷ்வத் மாரிமுத்து படம் உருவாகும் என ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டில் தொடங்குவதாக இருந்த படப்பிடிப்பை அடுத்தாண்டு பிப்ரவரிக்கு திட்டமிட்டுள்ளதாகவும், சிலம்பரசன் அரசன் திரைப்படத்தையும், அஷ்வத் தனது பணிகளையும் முடித்தபின் "எஸ்டிஆர் 51" ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியின் "ஸ்லம் டாக்" திரைப்படம் :

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள "ஸ்லம் டாக்" ((SLUM DOG)) திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் புரி ஜெகன்நாத் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தில், தபு, சம்யுக்தா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது.

Related Link
திருச்சி கிழக்கில் போட்டியா? சஸ்பென்ஸை நீட்டித்த லாரன்ஸ்

திருச்சி கிழக்கில் போட்டியா? சஸ்பென்ஸை நீட்டித்த லாரன்ஸ்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

2
3 hrs 53 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved