news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்திய டி20 அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி
tv

Also Watch

tv

Read this

இந்திய டி20 அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

ஷ்ரேயாஸ் ஐயர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஷ்ரேயாஸ் ஐயர்

கேப்டன் பதவிக்காக என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன் :

இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்காக தன்னை மாற்றி கொள்ளத் தேவையில்லை என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இதற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படி இருப்பதையே விரும்புவதாகவும், யாரை போன்றும் தாம் இருக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும். தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் நிறைய சவால்களை சந்தித்துள்ளதாகவும், ஆகவே தனக்கு சவால்கள் மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார். மும்பை அணிக்காக விளையாடி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அறிமுக வீரர் ஆல்ரவுண்டர் மாதவ் சுதரை பாராட்டிய கவாஸ்கர் :

இந்திய அணியில் புதிதாக அறிமுகமாகியுள்ள சுழற்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான மானவ் சுதரை, முன்னாள் வீரர் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பேட்டிங்கில் 41 பந்தில் 28 ரன்கள் சேர்த்ததோடு, 5 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

இதையடுத்து, மானவ் சுதரின் பந்துவீச்சு மட்டுமல்ல, பேட்டிங்கில் அவர் காட்டிய நம்பிக்கையும், குறிப்பாக அவர் தனது கால்களை பயன்படுத்திய விதமும், கிரீஸில் அவர் சௌகரியமாக நின்ற விதமும் தனித்து நின்றதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கன் வீரர் புதிய சாதனை :

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் புதிய சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகரில் நடந்து வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேஎல் ராகுல், சுப்மன் ஆகியோர் கில் சதமடித்து அசத்தினர்.

அதேசமயம், ஆப்கானிஸ்தான் அணி வீரர் சலீம் சபி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்: ஸ்வரேவ் சாம்பியன் :

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலியை வீழ்த்தி, ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

பாரிஸ் நகரில் உள்ள பிலிப் சாட்ரியர் மைதானத்தில் 4 மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-க்கு 1, 4-க்கு 6, 6-க்கு 4, 6-க்கு 7, 6-க்கு 1 என்கிற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றிபெற்றார்.

1996 ஆஸ்திரேலிய ஓபனில் போரிஸ் பெக்கருக்கு பிறகு ஒரு முக்கிய போட்டியை வென்ற முதல் ஜெர்மானி வீரர் என்ற பெருமையை பெற்றார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி :

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 140 ரன்களும், நியூசிலாந்து அணி 113 ரன்களும் எடுத்தன. இதனால், 27 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 226 ரன்கள் குவித்தது.

ஆனால், 2-வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி வெறும் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Link
தொடரில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி  விலகினார்

தொடரில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகினார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

2
4 hrs 9 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved