news-tamil-logo

3/22/2026, 10:39:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home news திமுக கூட்டணியில், இதுவரை 43, மீதம் இருப்பது 191
tv

Also Watch

tv

Read this

திமுக கூட்டணியில், இதுவரை 43, மீதம் இருப்பது 191

அண்ணா அறிவாலயம், சென்னை

Posted on: Mar 18, 2026 05:08 AM

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதி ஆகி உள்ளது. திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இதுவரை 43 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு, 191 தொகுதிகளை வைத்துக் கொண்டு, இதர கட்சிகளுடன் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டி.ஆர்.பாலு தலைமையிலான, திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மார்ச்-18 இ.கம்யூ. ஐந்து தொகுதிகள்
நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம், இறுதி ஆகி உள்ளது. திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. திமுக கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டுக்கு இம்முறை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கூட்டணியில் அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளதை தாண்டி, பாஜகவை வீழ்த்துவது ஒன்றே இலக்கு என்று, மாநில செயலாளர் வீரபாண்டியன் விளக்கம் தந்து உள்ளார்.

மதிமுகவுக்கு 4 தொகுதிகள்
கூட்டணியில் இருக்கும் வைகோ தலைமையிலான மதிமுகவுக்கு, கடந்த முறையை விட குறைந்த தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு எடுத்தது. உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட நிபந்தனை விதித்தது. இதுகுறித்து வைகோ தலைமையில் நடந்த மதிமுக அவசர உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அண்ணா அறிவாலயத்திற்கு வைகோ வந்து சேர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டது. திமுக உடன் ஒப்பந்தம் ஏற்பட்டதில் மகிழ்ச்சி என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு...
இந்த நிலையில், மார்ச் 13ஆம் தேதி, திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் இடையே ஒப்பந்தம் இறுதி ஆனது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது

திமுக கூட்டணியில் இதுவரை...

* காங்கிரஸ் - 28 + ராஜ்யசபா 1 இடம்

* இ.கம்யூ. - 5 தொகுதிகள்

* மதிமுக - 4

* இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2

* மனிதநேய மக்கள் கட்சி - 2

* கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2

* தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை

* இதுவரை 43 தொகுதிகள் - மீதம் இருப்பது 191 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இனிமேல்...

தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், தவாக உள்பட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது, பேச்சுவார்த்தை தொடந்து வருகிறது. 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடை தற்காலிகமாக நீக்கம்

0
3 mins agoshare
Iran allow








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved