ஏஸ் படத்தில் நடிக்க கூகுள் மூலம் தமிழ் மொழியை கற்றுக் கொண்டதாக, அப்படத்தின் நடிகை ருக்மணி வசந்த் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற ஏஸ் பட டிரைலர் விழாவில் பேசிய அவர், கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது 'ஏஸ்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான தருணம் எனவும் கூறினார்.