வெயில் காலம் வந்தாலே சிலருக்கு வியர்க்குரு பிரச்சனை கூடவே வந்துவிடும். அதிலும் நிறைய பேருக்கு உடல் முழுவதும் தோலின் மேற்புறத்தில் சிறியளவில் கொப்புளங்கள் ஏற்படும். அரிப்பை தாங்க முடியாத நிலைக்கு அவதி படுவாங்க . பொதுவாக மனிதனின் உடலில் ஒரு நாளைக்கு சுமார் அரை லிட்டர் முதல் முக்கால் லிட்டர் வரை வியர்வை நீர் வெளியேறுகிறதாம். அதிலும் ஒரு சிலர் எவ்வளவு வெயில் அடித்தாலும் தனக்கு வியர்க்கவில்லை என்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு வெயில் காலம் வந்தாலே வியர்வை பிரச்சனையும் கூடவே வந்துவிடும். அதிலும் பலர் வாசனை திரவியங்களை பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உடலில் தட்பவெப்ப சீதோஷ்ண நிலை மாற்றம், வெயிலில் அதிக நேரம் இருப்பது, இறுக்கமான ஆடைகளை அணிவது, காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் இருப்பது போன்றவை தான்.இதுமட்டும் அல்லாமல் நமது உணவு பழக்கங்களையும் மாற்ற வேண்டியது அவசியமான ஒன்று. இதில் நமது உடலில் சாதாரண நேரத்தில் இருக்கும் வெப்பத்தை விட கோடை காலத்தில் உடலின் வெப்பமானது அதிகமாகவே இருக்கும்.இதனால் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் நிலை உள்ளதால் வெயில் காலங்களில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது மற்றும் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதையும், காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. குளிர்ச்சியான குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, இரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடும். பொதுவாக, கோடை காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனை பலருக்கும் ஏற்படும் நிலையில் இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர நாம் பழங்களை அதிகளவில் உண்ணலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் வியர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் கிர்ணிப்பழம் சாப்பிடலாம். அதேபோல், வியர்க்குருவுக்கு பனை நுங்கு மிக சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மேலும் மஞ்சள், வேப்பிலை, சந்தனம் ஆகிய மூன்றுமே வியர்க்குருவுக்கு சிறந்த கிருமி நாசினியாக செயல்படும்.அதேபோல், நாம் வழக்கமாக குடிப்பதைவிட, வெயில் காலத்தில் சற்று அதிகமாக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இது போன்று செய்து வந்தால் வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். இதையும் படியுங்கள் : செல்போனில் கேம் விளையாட எதிர்ப்பு.. சொந்த குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய மாணவன்