ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில், கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் உறங்கி கொண்டிருந்த பெற்ற தாய் தந்தை மற்றும் உடன் பிறந்த அக்காவை, கல்லூரி மாணவன் கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் கோபத்தின் உச்சிக்கு செல்ல காரணம் என்ன.. சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.! ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் மாவட்டம் ஜெயபடாசெதி ஷகி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் கலியா. 65 வயதான இவருக்கு கனக்லதா என்ற மனைவியும், ரோஸ்லின் என்ற மகளும், சூர்யகாந்த் என்ற மகனும் உள்ளார். சூர்யகாந்த கல்லூரியில் படித்து வந்த நிலையில், அவருக்கு செல்போனில் கேம் விளையாடும் பழக்கம் இருந்து வந்தாக தெரிகிறது. இதனால் இவர் அதிக நேரம் செல்போனும் கையுமாக இருந்த வந்த நிலையில், கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தமால் இருந்தாக கூறப்படுகிறது. இதனால், வீட்டில் உள்ளவர்கள் செல்போனில் கேம் விளையாடுவதை நிறுத்துமாறு கூறி கண்டித்துள்ளனர். இதனால் கோவத்தின் உச்சிக்கே சென்ற, சூர்யகாந்த் ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தையே போட்டு தள்ளிவே ஸ்கெட்ச் போட்டுள்ளார். அதன்படி அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தந்தை பிரசாந்த், தாயார் கனக்லதா, அக்கா ரோஸ்லின் ஆகிய 3 பேரையும் கல்லால் அடித்துள்ளார். இதில் 3 பேரும் ரத்தம் தெறிக்க தெறிக்க சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தனர். தனது குடும்பத்தினர் உயிரிழந்ததை உறுதி செய்த மாணவன் சூர்யகாந்த் அருகே உள்ள கிராமத்திற்கு சென்று தலைமறைவாகியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாஎ 3 பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய சூர்யகாந்தையும் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.