Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
10 ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களிலும், 11 ஆம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களிலும்,
12 ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை, நாளை சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved