மகாராஷ்டிராவில் 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' என்ற அரியவகை நரம்பியல் நோயால் 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கை மற்றும் கால்களில் கடுமையான பலவீனம், தளர்வான அசைவுகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிப்பால், இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.