ஜாகுவார் நிறுவனத்தை தொடர்ந்து ஆடி நிறுவனமும் தனது பிரபல லோகோவை மாற்றியுள்ளது. 1930ஆம் ஆண்டில் இருந்து ஆடி கார்களின் அடையாளமாக 4 வளையங்கள் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் சீனாவின் ஷாங்காயில் அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்போர்ட் காரில் அவை இடம்பெறவில்லை. மாறாக ஆடி என்று மட்டும் ஆங்கிலத்தில் பெரிதாக பொறிக்கப்பட்டுள்ளது.