Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 12:41 PM
By: Manigandan Raja

முதல் சுற்றில் வெற்றி பெற்றார் :
கிளாசிக் ஸ்னூக்கர் முதல் சுற்றில் பங்கஜ் அத்வானி, சவுரவ் கோத்தாரி ஆகியோர் வெற்றி பெற்றனர். மும்பையில் நடைபெறும் சி.சி.ஐ. கிளாசிக் ஸ்னூக்கர் தொடரின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் புனேயின் பங்கஜ் அத்வானியும், ரயில்வே அணியின் ரோவின் டிசவுசாவும் மோதினர்.
இதில் 4-0 என்கிற புள்ளிக் கணக்கில் அத்வானி வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் கொல்கத்தாவின் சவுரவ் கோத்தாரியும், புனேயின் சூரஜ் ரதியும் மோதினர். இதில், கோத்தாரி 4-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்றார். மும்பையின் ஹசன் பதாமி 4-0 என்கிற கணக்கில் ரயில்வேயின் சித்தார்த் பாரிக்கை வீழ்த்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved