Also Watch
Read this
By: Manigandan Raja

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் பலப்பரீட்சை :
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் 69-வது லீக் சுற்று போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 70-வது லீக் சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் :
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ், 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீரர் அபாரம் :

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீரர் டாமி பால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்று வரும் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் - அமெரிக்காவின் டாமி பால் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டாமி பால் 2-க்கு 6, 6-க்கு 3, 6-க்கு 3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் பெருவின் இக்னசியோ ப்யூஸ், டாமி பால் ஆகியோர் மோதுகின்றனர்.
ஆண்கள் 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் புதிய வரலாற்று சாதனை :

தேசிய சீனியர் தடகள போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குரிந்தர்வீர் சிங் 10.09 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய வரலாறு படைத்தார்.
முன்னதாக், அவர் 10.16 விநாடிகளில் இலக்கை கடந்து புதிய சாதனை படைத்த நிலையில், சிறிது நேரத்திலேயே அனிமேஷ் குஜூர் 10.15 விநாடிகளில் இலக்கை எட்டி சாதனையை முறியடித்தார். இறுதிப்போட்டியில், குரிந்தர்வீர் சிங் 10.09 விநாடிகளில் கடந்தார்.
தாயகம் திருப்பும் அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா :

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போராடி வரும் நிலையில், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா தாயகம் திரும்புவது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளதால், ரச்சின் ரவீந்திரா தாயகம் திரும்புகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved