news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews எபோலாவுக்கு எதிரான அவசரகால தடுப்பு நடவடிக்கை
tv

Also Watch

tv

Read this

எபோலாவுக்கு எதிரான அவசரகால தடுப்பு நடவடிக்கை

எபோலா

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
எபோலாவுக்கு எதிரான அவசரகால தடுப்பு

ரூ.574 கோடி நிதி ஒதுக்கீடு செய்த ஐக்கிய நாடுகள் சபை :

காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலா நோய்த் தொற்றுக்கு எதிரான அவசரகால நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, ஐநா சபை 574 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆப்பிரிக்காவின் உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மற்ற நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவாமல் தடுக்க, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

புதிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்: உக்ரைன் அதிபர் தகவல் :

"ஓரேஷ்னிக்" ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் அடாவடி செயல்பாடுகளுக்கு எல்லையே இல்லை எனவும், மக்கள் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வலைதள பதிவால் சர்ச்சை :

மேற்காசிய வரைபடத்தில் ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவின் தேசியக்கொடி போர்த்தப்பட்டுள்ளது போன்ற புகைப்படத்தை அதிபர் டிரம்ப் தமது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஈரான் மீது புதிய தாக்குதல்களை தொடங்க திட்டமிட்டுள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் விமர்சகர் ஸ்டீபன் கால்பர்ட் கேலி செய்த டிரம்ப் :

அமெரிக்க அரசியல் விமர்சகர் ஸ்டீபன் கால்பர்ட்டை கிண்டல் செய்யும் வகையிலான ஏஐ வீடியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

ஸ்டீபன் கால்பர்ட்டையும், அவரது அரசியல் நிகழ்ச்சியையும் அடிக்கடி கிண்டலடித்து வரும் டிரம், திறமையில்லாமல், மதிப்பில்லாமல், ஒரு பிணத்தை போல் இருந்த ஸ்டீபன் இவ்வளவு காலம் நீடித்ததே ஆச்சரியம் என தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வான்வெளியை முழுமையாக மூடுவதாக ஈரான் அறிவிப்பு :

அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான் தனது வான்வெளியை முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது. நியூஜெர்சியில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது திட்டங்களை எல்லாம் ரத்து செய்துவிட்டு அவசரமாக வாஷிங்டனுக்கு திரும்பியுள்ளார். எனவே, மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

Related Link
நியூயார்க் நகரவாசிகளுக்கு மலிவு விலையில் டிக்கெட்டுகள்

நியூயார்க் நகரவாசிகளுக்கு மலிவு விலையில் டிக்கெட்டுகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

0
2 hrs 41 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved