Also Watch
Read this
By: Manigandan Raja

தாக்குதல் முன்பைவிட வலிமையாக தொடரும் :
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதை அதிபர் மசூத் பெஷெஷ்கியன் உறுதிப்படுத்தி உள்ளார். இது, 2 நாட்களில் கொல்லப்பட்ட 3-வது உயர்மட்டத் தலைவராவார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரவேல் காட்ஸ் கூறியிருந்த நிலையில், அவர் உயிரிழந்ததை ஈரான் புதன்கிழமை உறுதிப்படுத்தி உள்ளது. இதனிடையே, தங்களது பதிலடி தாக்குதல் முன்பை விட வலிமையாக தொடரும் என பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved