Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 07:09 AM
திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுகவினரிடம் இன்று மார்ச் 23ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினரிடம் பிற்பகலில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நேர்காணல் நடத்துகிறார்.
ஏப்ரல்-23ல் தேர்தல்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி விட்டது. வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதி, பிரச்சார பொதுக்கூட்டம் என்று, அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது. திமுக கூட்டணி, ஆட்சியை தக்க வைப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறது. தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறது.
நேர்காணல் தொடங்கியது
பரபரப்பான தேர்தல் களத்தில், திமுக கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 17ஆம் தேதி முதல் நேர்காணல் தொடங்கி, நடைபெற்று வருகிறது. முதல் நாளில், புதுச்சேரி, காரைக்கால் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. திமுகவில், வேட்பாளர்களாக போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்தவர்களிடம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் தொடங்கி உள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்.
தென் மாவட்ட தொகுதிகளுக்கு...
திமுகவில் தென் மாவட்டங்களுக்கான நேர்காணல் மார்ச் 18ஆம் தேதி நடைபெற்றது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம், தொகுதி நிலவரம் குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கேட்டறிந்து வருகின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில், போடி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே விருப்பமனு அளித்துள்ள நிலையில், நேர்காணலில் ஓ.பி.எஸ். பங்கேற்றார்.
மார்ச் 19ஆம் தேதி
கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட திமுகவினர் நேர்காணலில் பங்கேற்றனர்.
22ஆம் தேதி...
5ஆவது நாளாக, காலையில் கடலூர் கிழக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, விழுப்புரம் தெற்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. பிற்பகலில், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, காஞ்சீபுரம் வடக்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு நேர்காணல் நடைபெற்றது.
மார்ச் 23ஆம் தேதி
திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுகவினரிடம் நேர்காணல் நடைபெறுகிறது. புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினரிடம் பிற்பகலில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நேர்காணல் நடத்துகிறார்.
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடன் இருந்தனர். போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தவர்களை தொகுதி வாரியாக அழைத்து மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார். நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved