news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜனநாயகன் ரிலீஸ்? என்ன நடந்தது? யார் அந்த கருப்பு ஆடு?
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் ரிலீஸ்? என்ன நடந்தது? யார் அந்த கருப்பு ஆடு?

பயங்கர ஷாக்கில் ஜனநாயகன் டீம்

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக தலைவர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன், சென்சார் சிக்கலால் ரீலிஸ் ஆகாமல் இருந்த நிலையில், அப்படத்தின் ஐந்தரை நிமிட காட்சிகள் ஆன்லைனில் லீக்கானது. அதனை தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே முழுப்படமும், எந்த பிசிறும் இல்லாமல் HD பிரிண்டில் லீக்காகி இருப்பது, படக்குழுவினரை மட்டுமல்ல தியேட்டரில் கொண்டாடி தீர்க்க காத்திருந்த விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விஜய் அரசியல் பிரவேஷம்
2024 பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அரசியலில் நுழைந்த நடிகர் விஜய், தனது கடைசிப்படமான ஜனநாயகனுடன் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதியன்று மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிலும் இதனை கூறினார். ஜனநாயகன் திரைப்படம்,விஜய்க்கு 69ஆவது படம். தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்குப்பிறகு விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை மனமுவந்து வரவேற்ற ரசிகர்கள், கடைசி படமான ஜனநாயகனை தியேட்டர்களில் கொண்டாடி தீர்க்க தயராக இருந்தனர்.

சிக்கல் மேல் சிக்கல்
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், அரசியல் வசனங்கள் இருப்பதாகவும், சில முக்கிய குறியீடுகள் உள்ளதாகவும் கூறி சென்சார் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ரிவைசிங் கமிட்டிக்கு சென்றபிறகும் சென்சார் கிடைக்கவில்லை. இந்த சிக்கலுக்கு மத்தியில், ஏப்ரல் 24 ஆம் தேதி, அதாவது வாக்குப்பதிவுக்கு மறுநாள் ஜனநாயகன் ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவல் சமூகவலைதளத்தில் கசிய ஆரம்பித்தது.

ஆன்லைனில் ஜனநாயகன்
இதனால், ரசிகர்கள் தேர்தல் திருவிழாவிற்கு அடுத்த நாளும் நமக்கு திருவிழா தான் என்ற சந்தோஷத்தில் காத்திருந்தனர். ஆனால், இதையெல்லாம் சுக்குநூறாக்கும் வகையில் ஜனநாயகனின் முக்கிய காட்சி ஆன்லைனில் லீக்கானது. படத்தின் டைட்டில் கார்டு, விஜய்யின் MASS INTRO SCENE, ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் காட்சி மற்றும் அவருக்கு ராசியானவர்கள் கௌரவ தோற்றத்தில் வந்திருக்கும் கிளைமாக்ஸ் சீன் உள்ளிட்டவை கசிந்தது.

மதுரை சிறைச்சாலையை மையப்படுத்தி இடம்பெற்றுள்ள காட்சிகளும், விஜய் சண்டையிடும் காட்சிகளும் இருந்ததோடு, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை குறிப்பிடுவதுபோல் 'TVK' என்ற டாட்டூவும் இடம்பெற்றுள்ளது. படத்தில் ”தளபதி வெற்றி கொண்டான்” என்ற கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிடுவதுபோல் 'TVK' என்ற டாட்டூ இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது. இது, அவர் நிஜ வாழ்க்கையில் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும், அவரது சினிமா கதாபாத்திரத்திற்கும் இடையிலான ஒற்றுமையைக் காட்டும்வகையில் உள்ளதாக இருந்தது.

அரசியல் களத்தில் தன்னை முடக்கவே ஜனநாயகன் முடக்கப்படுவதாகவும், அதற்கு பின்னால் பெரிய சூழ்ச்சியே உள்ளதாகவும் நெல்லை பிரச்சாரத்தின்போது விஜய் பேசிய மறுநாளே படத்தின் 5.31 நிமிட காட்சிகள் வாட்ஸ் அப், டெலிகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் என அனைத்து சமூகவலைதளங்களிலும் லீக்கானது தவெகவினரை மட்டுமல்ல படக்குழுவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் இருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியாக தற்போது முழு படமும் ஆன்-லைனில் கசிந்தது. அதுவும் HD பிரிண்டில் லீக்காக, படத்தின் லிங்கை பலரும் டவுன்லோடு செய்திருப்பதுடன், கேட்பவர்களுக்கு ஷேர் செய்தும் கொண்டிருக்கிறார்கள்.

குற்றவியல் நடவடிக்கை, எச்சரிக்கை
இதுகுறித்து அறிந்த தயாரிப்பாளர் தனஞ்செயன், 3 மணி நேரப்படமும் லீக்காகி உள்ளது அதிர்ச்சியளிப்பதாகவும், இதை யார் செய்திருந்தாலும் கடுமையாக கண்டிக்கத்தக்கது எனவும், கே.வி.என். ப்ரொடக்சன்ஸ் உடனே நீதிமன்றத்தை அணுகி அந்த லிங்க் அனைத்தும் நீக்க வேண்டும் எனவும், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மேலும், விஜய்யின் கடைசி படத்தை இன்னும் எவ்வளவு தான் டார்கெட் செய்வீர்கள்? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல், படத்தை லீக் செய்தவர்கள் மீதும் ஷேர் செய்தவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழுவினரும் எச்சரிக்கை விடுத்தனர்.

யாரும் பகிர வேண்டாம்
இதனிடையே, ஜனநாயகன் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவை சுமந்துள்ளது என்றும், தயவுசெய்து யாரும் பகிர வேண்டாம் எனவும், பலரது உழைப்பு, கனவு, வாழ்க்கை எல்லாமே பாழாகிறது எனவும், அப்படத்தின் இயக்குநர் வினோத் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

இதுஒருபுறமிருக்க, இயக்குநர் மைக்கேல் அருண், சூசகமாக ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். லீக்கானது சாதாரண காப்பி அல்ல Edit Reference என சொல்லப்படும் காப்பிதான் என்றும் அந்த எடிட் மார்க் இருக்கும் வெர்ஷன் இயக்குநர், நடிகர், எடிட்டர், தயாரிப்பாளர் என படக்குழுவில் உள்ள மிக முக்கியமானவர்களிடம் மட்டுமே இருக்கும் எனவும் கூறி உள்ளார்.

யார் அந்த கருப்பு ஆடு?
அப்படியானால் உள்ளிருக்கும் கருப்பு ஆடுதான் படத்தை லீக் செய்திருப்பார்களா? ஜனநாயகனை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கமா? அல்லது அவர்கள் மூலமாக வெளிநபர்கள் யாரேனும் இந்த சூழ்ச்சியை செய்தார்களா? என பல கேள்விகள் எழுந்துள்ளது. கட்சி ஆரம்பித்தது முதலே பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சவால்களை சந்தித்து வரும் விஜயைபோல அவரது கடைசி படமான ஜனநாயகனும் ஆரம்பத்தில் இருந்தே சிக்கலுக்குள்ளாகி, கடைசியில் ஆன்லைனில் கசிந்திருப்பது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

Related Link
காரைக்குடியில் விஜய் ''மவுன'' பிரச்சாரம்

காரைக்குடியில் விஜய் ''மவுன'' பிரச்சாரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனிமொழியை இழிவுபடுத்தினாரா இபிஎஸ்?

7
9 mins agoshare
கனிமொழியை இழிவுபடுத்தினாரா இபிஎஸ்?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved