Also Watch
Read this

தமிழக முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் சிக்மா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சயின் முதல் படம்
சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம், வரும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்சன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமாக ஜேஎஸ்கே நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மறுப்பு
நடிகர் சிம்பு, சினிமா படப்பிடிப்பிற்கு ஒரு மணி நேரம் தாமதமாக வருவார் என கூறப்படுவது உண்மையல்ல என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறி உள்ளார். சில நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு முன்னரே படப்பிடிப்பிற்கு சிம்பு வருவார் என்றும் நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறினார். முதலில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க சிம்பு தலைமுடியை அதிகமாக வளர்த்து வந்ததாகவும், அரசன் கதையை கேட்டதும் அந்த திட்டத்தை தள்ளி வைத்ததாகவும் தாணு தெரிவித்து உள்ளார்.

முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் பயோபிக்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தாதா: தி சௌரவ் கங்குலி ஸ்டோரி Dada: The Sourav Ganguly Story படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்தது. இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், கங்குலி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கங்குலியின் ஆரம்ப வாழ்க்கை, கிரிக்கெட் பயணத்தில் முக்கியமான திருப்பங்களை வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved