news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தமிழ்நாடு தாங்காது சிஎம் சார் என உதயநிதி விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாடு தாங்காது சிஎம் சார் என உதயநிதி விமர்சனம்

குற்றங்கள் நடக்காத நாளே இல்லை

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீங்கள் டைம் எடுத்து, கற்றுக்கொண்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது CM Sir என்று, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி விமர்சித்து உள்ளார்.

கடலூர் பெண்ணுக்கு விபரீதம்
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
கடலூர் மாவட்டத்தில், 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது. இப்படி தொடர்ச்சியாக நடைபெறும், குற்றச் சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்கிற ஒன்று இருக்கிறதா இல்லையா? என்று மக்களுக்கு சந்தேகம் வருகிறது.

குற்றங்கள் நடக்காத நாளே இல்லை
இந்த ஷோஃபா மாடல் அரசு அமைந்தது முதல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று, இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்லை. தேர்தல் பிரச்சாரத்தில், பக்கம் பக்கமாக பேப்பர் வைத்து, சட்டம் ஒழுங்கு பற்றி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Modeக்கு போய் விட்டார்.

சிங்கப் பெண்கள் படை எங்கே?
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்கள் அறிவித்த சிங்கப்பெண்கள் படையின் தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செய்து உள்ளீர்கள். நிகழ்ச்சியை தள்ளி வைத்து உள்ளீர்களா? இல்லை அந்த முயற்சியையே தள்ளி வைத்து விட்டீர்களா? என்று மக்கள் கேட்கின்றனர்.

தமிழ்நாடு தாங்காது சிஎம் சார்
சிங்கப்பெண் படை என்று பெயரையும், Uniformஐயும் மாற்றுவது தான் மாற்றமா? இல்லை, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேண்டுமா? நீங்கள் டைம் எடுத்து கற்றுக்கொண்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.

Related Link
47 MLAவை வைத்து முதல்வர் கனவா? திமுக தோல்விக்கு இதுதான் காரணம்

47 MLAவை வைத்து முதல்வர் கனவா? திமுக தோல்விக்கு இதுதான் காரணம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆர்சிபி அணிக்கு திரும்பும் அதிரடி வீரர் பில் சால்ட்

5
2 hrs 49 mins agoshare
news image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved