Also Watch
Read this
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எந்தக் காலத்திலும் அனுமதிக்க முடியாது என அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக கூறி உள்ளார். அரசியல் காரணங்களுக்காக கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

விரைவில் நீதி
இதுதொடர்பாக, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியதாவது;
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு விரைவில் நீதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். போக்சோ குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத் தரப்படும். கோவை வழக்கில் துரிதமாக செயல்பட்டு, ஒவ்வொரு நாளும் அப்டேட் கொடுத்து உள்ளோம்.

பொறுப்பின்றி பேச்சு
மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் டி.கே.சிவகுமார் பொறுப்பின்றி பேசுகிறார். தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்.

சட்டப்பூர்வமாக மட்டுமே...
சர்ச்சை ஏற்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேகதாதுவில், கர்நாடகா அணை கட்டுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம். இரு மாநில மக்களுக்கு இடையில் நிறைய தொழில் உறவுகள் உள்ளன. சட்டப்பூர்வமாக மட்டுமே அவர்கள் செயல்பட வேண்டும். டி.கே.சிவகுமார் தன்னிச்சையாக பொறுப்புணர்வு இல்லாமல் செயல்படுவதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved