news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுக கண்டனம்
tv

Also Watch

tv

Read this

அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுக கண்டனம்

அதிமுகவினரை இழுப்பதுதான் பிரதான வேலையா?

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

குதிரை பேரத்தின் மூலம், அதிமுக தொண்டர்களை தவெகவிற்கு இழுப்பது ஏன்? என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

கட்சியை நடத்தும் அளவிற்கு தவெகவில் தொண்டர்கள் இல்லையா? என்றும் சரமாரிமாக கேட்டுள்ளார்.

என்ன பேசினார் ஆதவ்?
அதிமுக தொண்டர்களை குதிரை பேரத்தின் மூலம் இழுப்பது தான் தவெகவிற்கு முக்கிய வேலையா? என முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார். இன்னும் ஒரே மாதத்தில் 90 சதவீத அதிமுகவினர் தவெகவில் இணைவார்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது;
கட்சியை நடத்தும் அளவிற்கு தவெகவில் தொண்டர்கள் இல்லையா? அதிமுகவினரை விலை பேசி வாங்குவதற்கு இது லாட்டரி வியாபாரம் இல்லை. அதிமுக, கற்பக விருட்சம், பொன்விழா கண்ட கட்சி. இந்த கட்சியை பார்த்து தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

இதுதான் தூய ஆட்சியா?
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தூய ஆட்சியை தருவேன் என்று சொன்னார். ஆனால், தமிழகத்தில் நடப்பது என்ன? தமிழக வெற்றிக்கழகம் குதிரை பேரத்தின் மூலம் அதிமுகவினரை இழுப்பது தான் பிரதான வேலையாக உள்ளது. அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள், முதிர்ந்த ரோமம் என்று அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவே கூறி உள்ளார்.

விமர்சனத்தை நிறுத்த வேண்டும்
இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய வெற்றிக் கோட்டையாக அதிமுகவை மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. இப்படிப்பட்ட ஒரு கட்சியை விமர்சனம் செய்து வருகிறார் ஆதவ் அர்ஜுனா. அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும், இதற்கு சரியான பதிலடியை மக்கள் கொடுப்பார்கள்.
இவ்வாறு அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசி உள்ளார்.


Related Link
47 MLAவை வைத்து முதல்வர் கனவா? திமுக தோல்விக்கு இதுதான் காரணம்

47 MLAவை வைத்து முதல்வர் கனவா? திமுக தோல்விக்கு இதுதான் காரணம்

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆர்சிபி அணிக்கு திரும்பும் அதிரடி வீரர் பில் சால்ட்

5
2 hrs 48 mins agoshare
news image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved