Also Watch
Read this
By: Manigandan Raja

கடும் வெள்ளப்பெருக்கு :
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை, சேராப்பட்டு, இன்னாடு, குண்டியநத்தம், மாவடிபட்டு, கரியாலூர் உள்ளிட்ட கல்வராயன் மலை முழுவதும் இன்று மாலை 4 மணியளவில் இருந்து பரவலாக கனமழை பெய்தது.

இந்த கனமழையின் காரணமாக கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் கல்வராயன் மலையில் தொடர்ந்து கன மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மழையின் காரணமாக கல்வராயன் மலை முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved