news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
tv

Also Watch

tv

Read this

நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

விஜய் போட்டியிடும் தொகுதியில் மக்களுடன் சந்திப்பு

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருச்சி தெருக்களில் நடந்து சென்று திமுக வேட்பாளர்களுடன் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடையில் அமர்ந்து தேநீர் அருந்தி ஆதரவு கோரியவருடன் ஏராளமானோர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.



திருச்சியில் மு.க.ஸ்டாலின்
திருச்சியில், இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை, காந்தி மார்க்கெட் பகுதியில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபயணத்துடன் கூடிய வாக்கு சேகரிப்பை மேற்கொண்டார். திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களை திருவாரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கினார். திருச்சி வந்த அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். இன்று காலையில் ஸ்டாலின் நடைபயிற்சியுடன் கூடிய வாக்கு சேகரிப்பில் ஈடுபடலாம் என்ற தகவல் இருந்தது.

காந்தி மார்க்கெட் பகுதியில்...
இந்நிலையில், ஒரு ‘சர்ப்ரைஸ் விசிட்’ ஆக காந்தி மார்க்கெட் பகுதிகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வலம் வந்தார். காலை 6:30 மணி அளவில் தான் தங்கி இருந்த விடுதியில் இருந்து கிளம்பிய முதல்வர் ஐயப்பன் கோயில், கண்ட்டோன்மென்ட், பீமநகர், பாலக்கரை, மரக்கடை வழியாக காந்தி மார்க்கெட்டை வந்தடைந்தார். அவருடன் மூன்று பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமே சென்றன. மிகப் பெரிய அளவில் பாதுகாப்பு கெடுபிடி எதுவும் இல்லை.

பெண்களிடம் வாக்கு சேகரிப்பு
காந்தி மார்க்கெட் மிளகாய் மண்டி அருகே காரை விட்டு இறங்கிய மு.க.ஸ்டாலின், அங்கு நடைபாதைக் கடை வைத்துள்ள பெண்கள், வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தபடியே நடந்து சென்றார். பெண்கள் தன்னிடம் கூற விரும்புகின்ற கருத்தை நிதானமாக, நின்று கேட்டார். காந்தி மார்க்கெட் பிரதான வாயில், தஞ்சாவூர் சாலை வழியாக காந்தி மார்க்கெட்டுக்குள் சென்றார். மீண்டும் அதே வழியில் வெளியே வந்த ஸ்டாலின் பாலக்கரை ரவுண்டானா வரை நடை பயிற்சி மேற்கொண்டார்.

தேநீர் அருந்தியபடி...
முதல்வர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்யும் இடத்தில் பிரபலமான டீக்கடை ஒன்று உள்ளது. இந்த டீக்கடையில் அவருக்கு அரை கப் டீ அரை சர்க்கரை போட்டு கொடுக்கும்படி அவரது பாதுகாவலர்கள் வாங்கி கொடுத்தனர். அதை அமர்ந்து குடித்த ஸ்டாலின், அதன் பிறகு உற்சாகமாக காரில் ஏறி சென்றார்.

விஜய் தொகுதியில் ஸ்டாலின்
நடை பயணத்துடன் கூடிய வாக்கு சேகரிப்பை நடத்திய ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு தான் தங்கி இருக்கும் நட்சத்திர விடுதிக்கு சென்றடைந்தார். ஸ்டாலின் தற்போது நடை பயிற்சியுடன் கூடிய வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தொகுதி, திருச்சி கிழக்கு தொகுதி. இந்த தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இங்கு தான் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.

Related Link
அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"அடிமைக் கூட்டத்திற்கு எரிச்சல்"

10
37 mins agoshare
cm in thiruvarurbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved