news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பிரக்ஞானந்தாவுடன் செஸ் ஆடிய முதல்வர் ஜோசப் விஜய்
tv

Also Watch

tv

Read this

பிரக்ஞானந்தாவுடன் செஸ் ஆடிய முதல்வர் ஜோசப் விஜய்

ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்திய வீரரான பிரக்ஞானந்தாவை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் விஜய், பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடியதுடன், 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி உள்ளார்.

இந்திய கிராண்ட் மாஸ்டர்
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, இன்று ஜூன் 8ஆம் தேதி, சென்னை திரும்பிய நிலையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சாம்பியன் பட்டம்
நேற்று முன்தினம் நிறைவடைந்த நார்வே செஸ் தொடரில், உலகின் முன்னணி வீரர்களை பின்னுக்குத் தள்ளி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் நிகழ்த்தினார். 20 வயதான பிரக்ஞானந்தா, இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி பட்டத்தை உறுதி செய்தார்.

முதல்வரிடம் வாழ்த்து
நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் வாழ்த்தினார்.

செஸ் விளையாடிய முதல்வர் விஜய்
செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் விஜய், செஸ் போர்டு எடுத்து வர சொல்லி தன்னுடன் செஸ் விளையாடினார்,

தொடர்ந்து ரூ.50 லட்சம் வெகுமதி வழங்கினார் என்றும் கூறி, செஸ் வீரர் பிரக்ஞானந்தா மகிழ்ச்சி தெரிவித்தார்.

Related Link
இந்தியா டி20 அணியில் சூர்யவன்ஷி, ரசிகர்கள் வரவேற்பு

இந்தியா டி20 அணியில் சூர்யவன்ஷி, ரசிகர்கள் வரவேற்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

2
4 hrs 44 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved