பாலிவுட்டில் அறிமுகமாகும் அர்ஜூன் தாஸ், ரன்வீர் சிங்கிற்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்ம குரலோன் என ரசிகர்களால் புகழப்படும் அர்ஜூன் தாஸ், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களில் வில்லனாக மிரட்டி இருப்பார். அண்மையில் வெளியான குட் பேட் அக்லி படத்திலும் அஜித்துக்கு வில்லனாக நடித்து இருப்பார். தொடர்ந்து ரசவாதி உள்ளிட்ட படங்களில், ஹீரோவாக அதிரடி காட்டிய அர்ஜூன் தாஸ் தற்போது பவன் கல்யாணின் ஓ.ஜி படத்திலும், பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் கும்கி-2 படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், அர்ஜூன் தாஸ் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பர்ஹான் அக்தர் இயக்கத்தில் உருவாக இருக்கும் டான்-3 படத்தில் ரன்வீன் சிங்கிற்கு வில்லனாக அர்ஜூன் தாஸ் நடிப்பார் என கூறப்படுகிறது.கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கும் அர்ஜூன் தாஸிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.