ஆஸ்திரேலியாவில் உள்ள விராட் கோலியை சந்திப்பதற்காக உத்தரகாண்ட்டை சேர்ந்த அவரது தீவிர ரசிகர், 10 ஆயிரத்து 279 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3வது டெஸ்ட் போட்டிக்காக பிரிஸ்பேன் சென்றுள்ள விராட் கோலியை சந்தித்த ரசிகர் ஷோபித் வீர்மணி, தான் எழுதிய தி பிக்கஸ்ட் ஃபேன் ஆஃப் விராட் கோலி என்ற ஆங்கில புத்தகத்தை அவரிடம் வழங்கினார்.