துருக்கியில் மருத்துவமனை மீது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் மருத்துவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.முக்லா பயிற்சி மற்றும் ஆய்வு மருத்துவமனையில் இருந்து இரு பைலட்டுகள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு மருத்துவ பணியாளர் என மொத்தம் 4 பேர் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் பயணிக்க தயாராகினர். ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மருத்துவமனை கட்டடத்தின் மீது மோதி கீழே விழுந்தது.