பீகார் மாநிலத்தில், VVPAT சீட்டுகள் சாலையில் கேட்பாரற்று கிடந்த வீடியோ வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குபதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், சமஸ்டிபூரில் வாக்காளர்கள் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை சரிபார்க்க கூடிய VVPAT சீட்டுகள் சாலையோரத்தில் கிடந்துள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் அதிகாரிகள், வாக்குப்பதிவிற்கு முன்பு நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவின் சீட்டுகள் என தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உதவி தேர்தல் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.