Also Watch
Read this
By: Manigandan Raja

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுக விமர்சனம் :
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எதிராக இந்தியாவிற்கு அமெரிக்கா விதித்த தடைகள் மற்றும் வரிகள் குறித்து, பிரிக்ஸ் கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சர்வதேச சட்டத்துக்கு முரணான, ஒருதலைப்பட்சமான, நியாயமற்ற நடவடிக்கைகள் குறித்து தாம் கவனம் செலுத்த வேண்டும் என மறைமுகமாக விமர்சித்தார்.
அழுத்தங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது எனவும் அவர் அமெரிக்காவை சாடினார்.
ஈரான் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் வருகை :

டெல்லியில் நடைபெற்ற 'பிரிக்ஸ்' நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த ஈரான் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள், பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நாட்டில் எரிபொருள் விலை ரூ.15 வரை உயரக்கூடும்?
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் விலை 15 ரூபாய் வரை உயரக்கூடும் என பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விலையில் கடும் உயர்வு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால், இந்தியாவின் பல நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மக்கள் பீதியுடன் பெட்ரோல்களை வாங்குவதும், நீண்ட வரிசைகளில் நிற்பதும் காணப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாடு பயணங்கள் :

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஆண்டு வருவாய்க்கும், அவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிடும் தொகைக்கும் இடையே பொருத்தமின்மை உள்ளதாக கூறி, அவர் தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதி ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
அதோடு, அவரின் பல வெளிநாட்டுப் பயணங்கள் ரகசியப் பயணங்களாக உள்ளன. இந்த விவரங்களையும் அவர் ஆண்டு வாரியாக வெளியிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
கேரளத்தின் முதலமைச்சராகிறார் வி.டி.சதீசன் :

கேரளத்தின் முதலமைச்சராக வி.டி. சதீசன் வரும் 18ம் தேதி பதவியேற்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேரள சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து.
சதீசனை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நீண்ட இழுபறிக்கு பிறகு முறையாக அறிவித்தது. பதவியேற்பு விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved