news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews சாண்டி மாஸ்டரின் "பரிமளா அண்ட் கோ" திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

சாண்டி மாஸ்டரின் "பரிமளா அண்ட் கோ" திரைப்படம்

Parimala and Co

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பரிமளா அண்ட் கோ

"வாச்சா உடாத" பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு :

சாண்டி மாஸ்டரின் "பரிமளா அண்ட் கோ" திரைப்படத்தின் "வாச்சா உடாத" பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சாண்டியுடன் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பிரபு தேவா, வடிவேலு நடித்துள்ள "பேங் பேங்" திரைப்படம் :

பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள "பேங் பேங்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. "முசாசி" படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசரை கடந்த ஜனவரி மாதம் நடிகர் எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டார்.

"ரீங்காரா" பாடல் இன்று வெளியாகும் என அறிவிப்பு :

விஜய் ஆண்டனி நடிக்கும் "நூறு சாமி" திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "ரீங்காரா" பாடல் இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில் "லப்பர் பந்து" நடிகை ஸ்வாசிகா, லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கருப்பு திரைப்படத்தை உரிய முன்னறிவிப்பு இல்லாமல் ரிலீஸ் :

கருப்பு திரைப்படத்தை உரிய முன்னறிவிப்பு இல்லாமல் வட மாநிலங்களில் வெளியிட்ட க்யூப் நிறுவனத்தை தயாரிப்பாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சிவா, மனிதத் தவறால் தவறு நிகந்ததாக க்யூப் நிறுவனம் ஒப்புக் கொண்டதாகவும், உரிய நஷ்ட ஈடு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜெயிலர் 2 படப்பிடிப்பின் போது எலெக்ட்ரீஷியன் உயிரிழப்பு :

சென்னை ECR-ல், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பின்போது மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீஷியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்புகள், பனையூரில் உள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

Related Link
கருப்பு பட இயக்குநர் கண்ணீர், வீடியோ வைரல்

கருப்பு பட இயக்குநர் கண்ணீர், வீடியோ வைரல்

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த தடை

2
1 hr 46 mins agoshare
ஜெய்சங்கர் மறைமுக விமர்சனம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved