Also Watch
Read this
By: Manigandan Raja

சுற்றுலா வாகன ஓட்டிகள் கவலை :
அமெரிக்கா ஈரான் ஈராக் போன்ற நாடுகளில் போர் நடைபெற்று வந்த நிலையில் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டது. குறிப்பாக இந்தியாவில் பல இடங்களில் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் பல்வேறு பகுதிகளில் உணவு விடுதிகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் டீசல் விலையானது அதிகரித்து நிலையில் தரைப்பகுதிகளில் லிட்டர்க்கு ஒரு ரூபாய் 50 காசு வீதமும் மலை பிரதேசங்களில் மூன்று அதிகரித்தும் பெட்ரோல் 105.80 டீசல் 97.36 இன்று விற்பனை ஆகிறது.
இதன் காரணமாக மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக வாடகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
கொடைக்கானல் தற்போது கோடை சீசன் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் சுற்றுலா செல்ல கூடுதல் விலை நிர்ணயம் செய்ய முடியாமல் சுற்றுலா வாகன ஓட்டிகள் பெரும் அதிர்பிதியில் உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved