Also Watch
Read this
By: Manigandan Raja

நிலைத்தன்மை குறித்து ஆய்வு :
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல இயக்குனர் கிரிதர் தலைமையில் தமிழ்நாடு சார்பாக பெரியாறு - வைகை வடிநில மதுரை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் இர்வின், பெரியாறு அணை கம்பம் டிவிசன் சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் செல்வம் மற்றும் கேரளம் அரசு சார்பாக கேரள நீர்ப்பாசனத் துறை கட்டப்பனா டிவிசன் கண்காணிப்பு பொறியாளர் லெவின்ஸ் பாபு கோட்டூர்.
கேரளா நீர்ப்பாசன துறை மேலாண்மை பொறியாளர் கோஷி ஆகியோர் அடங்கிய துணை கண்காணிப்பு குழுவினர் மற்றும் இரு மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்றும் தேக்கடி படகுத்துறையில் இருந்து ஆய்வுக்காக புறப்பட்டுச் சென்றனர்.
தமிழகம் கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் முடிவு பற்றி புதிய ஆட்சி அமைந்திருக்கும் சூழலில் இந்த ஆய்வானது இரு மாநில மக்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது
இந்த ஆய்வானது முல்லைப் பெரியாறு அணையின் ஷட்டர் பகுதி கேலரி பகுதி நீர்க்கசிவு பேபி அணை ஆகியவற்ற ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்கள்
தமிழக மக்களின் நீள கோரிக்கையான முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது தற்பொழுது 148 அடிவரை தண்ணீரை சேமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஐந்து மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றன.
தேனீ திண்டுக்கல் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்ட சேர்ந்த விவசாயிகள் பொதுமக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது முல்லைப் பெரியாறு அணை புதிய அரசு இதற்கு விவசாயி என கோரிக்கை ஏற்று தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
புதிய அரசு அதை நிறைவேற்றுமா அல்லது முல்லைப் பெரியாறு அணையை மீட்டெடுத்து தமிழகத்திற்கு கொடுக்குமா தமிழக காவல்துறையினர் முல்லைப் பெரியாறு அணையில்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்களா? என பல்வேறு எதிர்பார்ப்புடன் ஐந்து மாவட்ட விவசாயிகள் காத்துக் கொண்டுள்ளனர் .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved