Also Watch
Read this
By: Manigandan Raja

டாஸ்மாக் முற்றுகை போராட்டம் :
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பசுபதி வீதியில் அரசு மதுபான கடை எண் (2004) இந்த கடை அருகில் குடியிருப்புகள் மற்றும் கோவில் மற்றும் அரசு பள்ளி உள்ள நிலையில் பல ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள் கடைய இடமாற்றம் செய்ய வேண்டுமென பல கட்ட போராட்டங்கள் நடத்தையும் அரசு மதுபான கடை அகற்றப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசு தற்பொழுது 771 மதுபான கடைகள் அகற்றப்படும் என கூறிய நிலையில் உடுமலைப்பேட்டையில் உள்ள இந்த கடைய அகற்ற வேண்டும் என பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடையை திறக்க விடாமல் பதாகையை ஏந்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது தமிழக அரசு உடனே கடையை மூட வேண்டும் என கோசங்கள் எழுப்பப்பட்டன சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயம் இடம் பொதுமக்கள் கடையை மூட வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved