டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில், தூதர் எரிக் கார்செட்டி, பஞ்சாபி பாடலுக்கு தீப்பொறியாக பங்க்ரா நடனம் ஆடும் காட்சிகள் இணையவாசிகளிடம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. விக்கி கவுசால், திருப்தி திம்ரி நடித்த Bad News படத்தில் இடம் பெற்ற தவுபா..தவுபா.. என்ற பாடலுக்கு, அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தேசி ஸ்டைலில் நடனமாடினார்.வடக்கத்திய ஸ்டைலில் குர்த்தா பைஜாமா மற்றும் ஷால் அணிந்து ஆட்டம் போட்ட எரிக் கார்செட்டி, இந்திய அமெரிக்கர்களுக்கும், தீபாவளி போன்றவற்றுக்கும் ஆதரவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.