அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து 168 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இருந்து மேடே அழைப்பு வந்ததையடுத்து, அந்த விமானம் பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின் சுவடுகள் மறைவதற்குள், கவுஹாத்தியில் இருந்து சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் மேடே என விமானி அறிவித்தார். இதனால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். பெங்களூரு விமானநிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.இதையும் படியுங்கள் : அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது..