news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் பதிவு
tv

Also Watch

tv

Read this

தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் பதிவு

Mari Selvaraj

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மாரி செல்வராஜ்

ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை திரையில் கரசாமியாக : 

திரை சிந்தனை, திரை விறுவிறுப்பை தனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் இருந்தது என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய தனுசுக்கு நன்றியையும், அன்பையும் சொல்ல தோன்றுகிறது என்றும், மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை , திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

படையப்பா திரைப்பட தயாரிப்பாளர் தேனப்பனுக்கு பரிசு :

படையப்பா திரைப்பட தயாரிப்பாளர் தேனப்பனுக்கு 5 சவரன் தங்க செயினை நடிகர் ரஜினிகாந்த் பரிசாக வழங்கியுள்ளார். படையப்பா ரிலீஸாகி 25 ஆண்டு நிறைவானதை கொண்டாடும் விதமாகவும், ரஜினியின் 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும் ரீ-ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இந்நிலையில், படையப்பா பட தயாரிப்பாளர் தேனப்பனை மீண்டும் நேரில் அழைத்த ரஜினிகாந்த், பரிசளித்து மகிழ்ந்தார்.

'29' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது :

மேயாத மான் திரைப்பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ள '29' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜி-ஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் 'ரெட்ரோ' படத்தில் வில்லனாக நடித்த விது, ப்ரீத்தி அஸ்ரானி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் மே-8 ஆம் தேதி வெளியாக உள்ளது.

'கர' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது :

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் மாமிதா பைஜு, ஜெயராம், கருணாஸ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படம், 1991 வளைகுடாப் போர் பின்னணியில் நடக்கும் கடத்தல் கதையைக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இன்று வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் ஏன் வாக்களிக்கவில்லை? 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது பேசும் பொருளான நிலையில், அது குறித்து ஆர்ஜே. பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். ‘29’ திரைப்படத்தின் அறிமுக விழாவில் இது குறித்து பேசிய ஆர்ஜே. பாலாஜி, சில வேலைகளை முடித்து விட்டு விமான நிலையம் வருவதற்குள் கேட் மூடப்பட்டதால் விமானத்தைப் பிடிக்க முடியவில்லை என்பதால் வாக்களிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

Related Link
கேரள திரையுலகில் சாதனை படைத்த வாழ -2 திரைப்படம்

கேரள திரையுலகில் சாதனை படைத்த வாழ -2 திரைப்படம்





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 50 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved