இந்தியாவிலிருந்து 30 டன் அளவிலான மருத்துவ உதவிகள் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், மனிதாபிமான ரீதியிலான உதவியாக அத்தியாவசிய மருந்துகள், புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் உள்ளிட்டவற்றை பாலஸ்தீனத்துக்கு அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.