குருபூர்ணிமாவையொட்டி மகாரஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபாவிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 59 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கிரீடம் சூடப்பட்டு ஆராதனை நடைபெற்றது. சீரடி கோயிலில் வெகுசிறப்பாக நடைபெற்ற குருபூர்ணிமா விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் சுமார் ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது 566 கிராம் எடையுள்ள 59 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கிரீடம், 54 கிராம் எடையுள்ள தங்க பூக்கள் மற்றும் 2 கிலோ எடையுள்ள வெள்ளி நெக்லஸ் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர். இந்த விழாவில் 61 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.