பீகாரை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, 2002ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஒடிசாவில் வாக்காளர் சிறப்பு திருத்தம் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டார். தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றவர், இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். அதோடு, மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 38,000 லிருந்து 45,000 ஆக உயர்த்த உள்ளதாகவும் கூறினார்.