Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 10:44 AM
By: Manigandan Raja

இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலா கழகத்தில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், லாலு பிரசாத் மீதான விசாரணைக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. ரயில்வேயில் உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் 2 ஹோட்டல்களை தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டதில் முறைகேடு செய்ததாக பீகார் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் மீது டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, லாலு பிரசாத் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved