Also Watch
Read this
சென்னையில், இன்று மார்ச் 23ஆம் தேதி, ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.
மார்ச்-23
ஒரு சவரனுக்கு ஐந்தாயிரத்து 360 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 13 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் சரிந்தது. ஒரு கிராமுக்கு 670 ரூபாய் குறைந்து 12 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை போலவே வெள்ளி விலையிலும் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 235 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்ச்-18
ஒரு சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிரடியாக குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி, 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச்-19
சென்னையில், ஆபரண தங்கத்தின் விலையில் ஒரு கிராமுக்கு 270 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில், மேலும் 3,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
மார்ச்-20
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் உயர்ந்த நிலையில், வெள்ளி விலை சரிந்தது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்ச்- 21
ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 640 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 330 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 620 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
18 மார்ச் - ரூ.1,16,560
19 மார்ச் - ரூ.1,14,400 - காலை
19 மார்ச் - ரூ.1,11,200 - பிற்பகல்
20 மார்ச் - ரூ.1,11,600
21 மார்ச் - ரூ.1,08,960
23 மார்ச் - ரூ.1,03,600 இன்றைய விலை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved