Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 08:51 AM
புதுச்சேரியில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதாக கூறி, வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு கூறி, முழக்கமிட்டனர்.
நாராயணசாமிக்கே இல்லையா?
புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டு நாராயணசாமி ஆதரவாளர்கள், திடீர் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் காரணமாக, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
புதுச்சேரி முதலமைச்சர் வேட்பாளராக வைத்திலிங்கத்தை முன்னிறுத்த ராகுல்காந்தி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வைத்திலிங்கத்தை முன் நிறுத்துவதற்காக ஏற்கனவே முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்றே கடைசி
வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் முடியும் நிலையில், காங்கிரஸ் கட்சி கோஷ்டி பூசலால் போட்டியிடும் தொகுதிகள் கூட அறிவிக்கப்படவில்லை. 5 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி, கடந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டார்.
தற்போது, திடீரென தேர்தலில் போட்டியிட நாராயணசாமி முயற்சிப்பதால், புதுச்சேரி காங்கிரசில் குழப்பம் நீடித்து வருகிறது. புதுச்சேரியில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனிடையே புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டு நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வைத்திலிங்கத்திற்கு எதிராக...
நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட நாராயணசாமிக்கு சீட் மறுத்ததால் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். வைத்திலிங்கத்துக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களையும் எழுப்பி நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved