திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டன் கடற்படை போர் விமனம் 14 நாட்களுக்குப் பிறகு பழுது நீக்குவதற்காக அங்குள்ள ஹேங்கர் எனப்படும் விமான தங்குமிடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அரபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்ட இந்த விலை உயர்ந்த F-35B போர் விமானம் பல நாட்களாக விமான நிலைய பாதை ஒன்றில் நிறுத்தப்பட்டது. ஹைட்ராலிக் பிரச்சனை உள்ளிட்டவற்றால் விமானம் எழும்ப முடியாத நிலையில், தற்போது பிரிட்டனில் இருந்து தொழில்நுட்ப குழுவினர் வந்த பிறகு விமானம் ஹங்கருக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. பிரிட்டன் குழுவினர் வந்து பரிசோதித்த பின்னரே பழுது நீக்கும் பணிகள் துவங்கும் என தெரிகிறது.இதையும் படியுங்கள் : கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை.. ஐந்து மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்