Also Watch
Read this
By: Web Team

கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுத் துறை ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கனமழையால் முக்கிய அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது, வயநாடு மாவட்டத்தில் உள்ள பனசுரா சாகர் அணை, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மூழியார் அணை ஆகியன திறக்கப்பட்டுள்ளன.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 புள்ளி 70 அடியை எட்டியுள்ளது. நீர்மட்டம் 136 அடியை எட்டினால் அணை திறக்கப்படும் என தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் உருது ஆசிரியர் நியமனம்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved