சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் உருது பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2022 ஆம் ஆண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மதராஸா-இ-அசாம் தொடக்கப்பள்ளியில் உருது ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஹாஜிரா என்பவர், ஆசிரியர் தகுதித் தேர்வை அவர் எழுதவில்லை எனக் கூறி ஒப்புதல் வழங்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதனைத் எதிர்த்து பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கில், ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனக் கூறி, ஹாஜிரா நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.இதையும் படியுங்கள் : தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தேர்தல்..