Also Watch
Read this
By: Manigandan Raja

துறைமுக பகுதிகளில் இருந்து வெளியேறுக :
ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள துறைமுக பகுதிகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய இடமாக திகழ்ந்த கார்க் தீவுப் பகுதியில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால், ஈரான் கடும் கோபம் அடைந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு அமீரக அரசு ஆதரவாக செயல்படுவதாக கூறி வரும் ஈரான், அமீரகத்துக்கு சொந்தமான துறைமுகங்களில் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி துபாய் ஜெபல் அலி துறைமுகம் மற்றும் அபுதாபி காலிஃபா, புஜாரா துறைமுகங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved