Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 10:20 AM
By: Manigandan Raja

cryogenic rocket engine சோதனை :
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் ISRO தனது CE-20 cryogenic rocket engine சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதற்கு முன் 19 tonne அளவில் சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 22 -tonne thrust அளவில் கடல் மட்டத்தில் வெற்றிகரமாக hot test செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
CE20 கிரையோஜெனிக் எஞ்சின், இந்தியாவின் கனரக ஏவுகணை வாகனமான LVM3-ன் மேல் cryogenic ஸ்டேஜை இயக்கும் முக்கிய எஞ்சினாகும் ..LVM3 வாகனத்தின் பேலோட் திறனை மேலும் உயர்த்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நடத்தப்பட்ட சோதனையில் Nozzle Protection System உதவியுடன் CE-20 எஞ்சின் 165 வினாடிகள் தொடர்ந்து 22 டன் த்ரஸ்ட் அளவில் இயக்கப்படுவதற்கு தகுதி பெற்றது. இந்த புதிய முன்னேற்றம், எதிர்காலத்தில் LVM3 ஏவுகணை வாகனத்தின் சுமப்பு திறனை அதிகரிப்பதுடன், இந்தியாவின் கனரக விண்வெளி பயணங்களுக்கு வலுசேர்க்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved